கரிபியன் கடலில், வெனிசுலாவில் இருந்து புறப்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் படகுகள் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய சர்ச்சைக்குரிய தாக்குதல்களில், உயர்தொழில்நுட்பம் கொண்ட கனடாவின் கேமரா அமைப்பு பயன்படுத்தப்பட்டதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, கனடாவின் வெளியுறவுத் துறை (Global Affairs Canada) “சம்பவம் குறித்து கண்காணித்து வருவதாக” தெரிவித்துள்ளது.
‘Project Ploughshares’ என்ற அரசு சாரா அமைப்பினால் பிரத்தியேகமாக ஊடகமொன்றின் விசாரணைப் பிரிவிடம் பகிரப்பட்ட அறிக்கையின்படி, கனேடியாவில் தயாரிக்கப்பட்ட L3Harris WESCAM MX-Series ரக உணரி அமைப்பு (Sensor System) இந்தத் தாக்குதலின்போது, படகுகளைக் கண்காணிக்கவும் வேவுபார்க்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
“கனடாவின் ஆயுதங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். மனித உரிமைக் கண்காணிப்பு இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்,” என்று Project Ploughshares அமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளர் கெல்சி கல்லாகர் (Kelsey Gallagher) வலியுறுத்தியுள்ளார்.
