மொன்றியல் துறைமுகத்தின் (Montreal Port) உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து பதவி விலகிய விவகாரம் தொடர்பில் விளக்கம் அளிக்குமாறு, நாடாளுமன்றக் குழு உத்தரவிட்டுள்ளது.
துறைமுகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) உட்பட மூன்று முக்கிய அதிகாரிகள் ஒரே மாதத்தில் வெளியேறியுள்ளமை இராஜதந்திர மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பதவி விலகிய மூன்று அதிகாரிகளும் இம்மாத இறுதியில் நாடாளுமன்றக் குழு முன்னிலையில் வாக்குமூலம் அளிக்கவுள்ளனர்.
இவர்களின் வாக்குமூலங்கள், மொன்றியல் துறைமுகத்தின் எதிர்கால நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மொன்றியல் துறைமுகத்தின் சரக்குக் கையாளுதல் குறைந்து வருவதோடு, தொழிலாளர் போராட்டங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
இத்தகைய சூழலில், முறையான மாற்றுத் திட்டம் (Succession plan) இன்றி, மொன்றியல் துறைமுகத்தின் நிர்வாகத்திலிருந்து உயர் அதிகாரிகள் விலகியிருக்கின்றமை, நாட்டின் விநியோகச் சங்கிலி மற்றும் சர்வதேச வர்த்தகத்தைப் பாதிக்கக்கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.
