அமெரிக்க தயாரிப்பான F-35 போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்திலிருந்து விலகும் திட்டம் கனடா மத்திய அரசுக்கு இல்லை என கனடாவின் பாதுகாப்பு கொள்முதல் துறைக்கான இராஜாங்கச் செயலாளர் (Secretary of State for Defence Procurement) ஸ்டீபன் ஃபூர் தெரிவித்துள்ளார்.
தற்போது உற்பத்தியில் உள்ள 16 விமானங்களுக்கான ஒப்பந்தத்தை முடித்த பிறகு, மீதமுள்ள கொள்முதலில் இருந்து ஒட்டாவா வெளியேறுமா என்று ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
லிபரல் கட்சியின் அரசாங்கம் 2023-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 88 F-35 ஜெட் விமானங்களை கொள்முதல் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது.
ஆனால், அமெரிக்காவுடனான வர்த்தக பதட்டங்கள் அதிகரித்ததையடுத்து, அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் கடந்த மார்ச் மாதம் கொள்முதல் திட்டத்தை கனடா மறுபரிசீலனை செய்வதாகக் கூறியிருந்தார்.
முழுமையான 88 ஜெட் விமானங்களை கொள்முதல் செய்வது குறித்த இறுதி முடிவை பிரதமர் மார்க் கார்னி எடுப்பார் என்று கூறப்படுகின்றது.
