இந்தியாவில் பல்கலைக்கழக மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவியொருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணிபுரிபவர் என இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கல்வி பயிலும் மாணவியொருவரை அச்சுறுத்திப் பாலியல் வன்கொடுமைக்குப்படுத்தியதாக கோட்டூர்புரம் காவல்துறை உதவி ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்செயலைக் கண்டித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.