எதிர்வரும் 28 ஆம் திகதி கனடாவின் பொதுத்தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்கள் கனடாவின் பல பகுதிகளிலும் சூடுபிடித்துள்ளன.
கனேடிய பிரதமரும் லிபரல் கட்சித் தலைவருமான மார்க் கார்னி மற்றும் பழமைவாத கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ர் ஆகிய இருவரும் இன்றைய தினம் கியூபெக் மாகாணத்தில் தங்கள் பிரசாரத்தை முன்னெடுத்தனர்.
பியர் பொய்லிவ்ர் இன்று காலை 9 மணியளவில், மொன்ரியலில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றினார்,
மார்க் கார்னி இன்று காலை 10 மணியளவில் டோர்வல் நகரில் மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும், கட்சித் தலைவர்களிடையேயான தொடைக்காட்சி விவாதங்கள் இவ்வாரத்தில் நடைபெறவுள்ளன.
பிரெஞ்சு மொழியிலான விவாத நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆங்கில மொழியிலான தொலைக்காட்சி விவாதம் எதிர்வரும் வியாழனன்று நடைபெறவுள்ளது.