கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான பியர் பொய்லிவ்ர், வரி ஏய்ப்புக் கூடங்களை தடுப்பது குறித்து பேசினாலும், பல பெரிய வணிகத் தலைவர்கள் இன்னும் அவருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டல்ஹவுசி பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் பேராசிரியர் லோரி டர்ன்புல் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
வரி ஏய்ப்புக் கூடங்கள் மற்றும் ஆடம்பரமான தனியார் ஜெட் விமானங்கள் போன்றவற்றை பியர் பொய்லிவ்ர் விமர்சித்தாலும், ”கன்சர்வேட்டிவ்” எனப்படும் ஒரு பழமைவாத அரசாங்கம் கனடாவில் அமைவது, தங்கள் வணிகங்களுக்கு நன்மை தரக்கூடியது என்று வணிகங்கள் இன்னும் நினைக்கின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரான பொய்லிவ்ருக்கு ஆதரவாக, 30க்கும் மேற்பட்ட முக்கியமான வணிக ஆளுமைகள், செய்தித்தாள் விளம்பரங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளமையை பேராசிரியர் லோரி டர்ன்புல் சுட்டிக்காட்டினார்.