ஒண்டாரியோ மாகாண சட்டசபையின் முதலாவது பெண் சபாநாயகராக Donna Skelly இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் தொலைக்காட்சி செய்தியாளரான Donna Skelly, ஒண்டாரியோவின் Hamilton பகுதியிலிருந்து ஒண்டாரியோ மாகாண சட்டசபைக்குத் தெரிவானார். இதற்கு முன்னர் சபாநாயகராக பதவிவகித்த Ted Arnott ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, அப்பதவிக்கு Donna Skelly உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டார்.
ஒன்ராறியோ மாகாண சட்டசபை நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ள ஒன்றாகும். இச்சபையில் 1867 ஆம் ஆண்டு முதல் முதல் பல சபாநாயகர்கள் பதவி வகித்துள்ளனர். 158 ஆண்டுகளின் பின்னர் ஒண்டாரியோ மாகாண சட்டசபையில் சபாநாயகராகப் பதவியேற்கும் முதலாவது பெண் என்ற பெருமையை Donna Skelly பெறுகின்றார்.