மொன்றியல் நகரின் செயிண்ட்-லியோனார்ட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 52 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்த சம்பவம், அப்பிரதேசத்தில் இந்த ஆண்டின் 23வது கொலையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் சந்தேகத்திற்கிடமான மரணம் என்று கருதப்பட்ட நிலையில், பின்னர் இது ஒரு கொலை என மொன்றியல் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில், உயிரிழந்தவட்டவர் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பில் கொள்ளை நடந்திருக்கலாம் என மொன்றியல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கரோலின் செவ்ரெஃபில்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, 31 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திற்கு அருகிலேயே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கொள்ளைச் சம்பவத்திற்கும், 52 வயது மதிக்கத்தக்க நபரின் மரணத்திற்கும் இடையே தொடர்பு இருக்கக்கூடும் என காவல்துறை கருதுகிறது.
இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
