ஒன்ராறியோ மாகாணத்தில் தடுப்பூசி போடப்படாத மக்களிடையே தொடர்ந்து தட்டம்மை பரவி வருவதால், அங்கு தட்டம்மை பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன.
அக்டோபர் 28, 2024 அன்று ஒரு தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒன்ராறியோ பொது சுகாதார நிறுவனம் மொத்தம் 372 நோய் தொற்றுக்களை பதிவு செய்துள்ளது. பிப்ரவரி 27 அன்று அந்த நிறுவனத்தின் கடைசி அறிக்கையிலிருந்து இது 195 நோய் தொற்றுகள் அதிகரிப்புஎன்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த பரவலின் விளைவாக 31 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதில் ஒரு குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது . மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், 30 பேர் தடுப்பூசி செலுத்தவில்லை எனவும் மற்றும் ஒரு நபரின் நோய்த்தடுப்பு நிலை தொடர்பில் தெரியவில்லை எனவும் தெரியவந்துள்ளது
பொது சுகாதார நிறுவனம் சமீபத்திய நோயாளர்களின் எண்ணிக்கையை “விரைவான அதிகரிப்பு” என்று தெரிவித்துள்ளது தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் மற்றும் இள வயதினர்களிடையே பரவுவதே தொற்றுநோய் விரிவாக்கத்திற்குக் காரணம் என தெரிவித்துள்ளது