Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

மொன்ட்ரியலில் உறையவைக்கும் பனிப்பொழிவுக்கு மத்தியில் தொடரும் மின்தடை – ஆயிரக்கணக்கான மக்கள் இருளில் தவிப்பு

ஜனவரி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்ட்ரியல் நகரம் ஒருபுறம் கடும் பனிப்பொழிவாலும், மறுபுறம் தொடர் மின்வெட்டாலும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.
ஏற்கனவே உறைபனி குளிரால் மக்கள் தவித்து வரும் நிலையில், இன்று சுமார் 25 சென்டிமீட்டர் வரையிலான புதிய பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை ஹாம்ப்ஸ்டெட்(Hampstead) மின்
நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,
மொன்ட்ரியலின் பல பகுதிகள் இருளில் மூழ்கின.

பெரும்பாலான இடங்களில் மின்சாரம் சீராகிவிட்டாலும், இன்னும் சுமார் 3,000 வீடுகள் மூன்றாவது நாளாக மின்சாரம் இன்றி உள்ளன.

அனைத்து வீடுகளுக்கும் ஒரே நேரத்தில் மின்சாரம் வழங்கினால் மின்சாரக் கட்டமைப்பு (Grid) தாங்காது என்பதால், ஒவ்வொரு வீடாக நிதானமாகவே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என ஹைட்ரோ-கியூபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மின்வெட்டு மற்றும் பனிப்பொழிவு காரணமாக கோட் செயின்ட் லூக் மற்றும் என்.டி.ஜி (NDG) பகுதிகளில் உள்ள பல பள்ளிகளுக்கு
இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மொன்ட்ரியல் ட்ரூடோ விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து
செய்யப்பட்டுள்ளன.

வீடுகளில் வெப்ப வசதி இல்லாதவர்களுக்காகக் கனேடிய செஞ்சிலுவைச்சங்கம் (Red Cross) கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) சமூகமையத்தில் அவசர தங்குமிடத்தைத் திறந்து வைத்துள்ளது.

முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத்
தீயணைப்பு வீரர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பனி உறைந்து குழாய்கள் வெடிப்பதைத் தவிர்க்க, வீடுகளில் ஒரு குழாயைத் திறந்து வைத்து சிறிதளவு தண்ணீரை ஓட விடுமாறு கியூபெக் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முந்தைய செய்தி இன்றைய பஞ்சாங்கம் மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 27 ஜனவரி 2026
அடுத்த செய்தி கியூபெக் மாகாணம் தனிநாடாக உருவாவதற்கான பொது வாக்கெடுப்பு தொடங்கிவிட்டதாகப் பால் செயின்ட்-பியர் பிளாமண்டன் அறிவிப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் – செபமாலை அந்தோணி சிவராசா

ஜூலை 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கைவிடப்பட்ட பழமையான கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

ஜூன் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் கேரள கஞ்சா பொதிகள் மீட்பு…

மே 12, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஸ்பெயின் டெனெரிப் தீவில் கடலில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

நவம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?