இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களில் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது என்பது முக்கியமானதாகும்.
Facebook போன்ற பிரபலமான தளங்களில் Profile Lock என்ற வசதி பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தி வருகின்றது.
இதன் மூலம் நமது பதிவுகள், புகைப்படங்கள் இவையனைத்தும் நண்பர்கள் மட்டும் பார்க்கும் வகையில் கட்டுப்படுத்தப் படுகின்றது.
தற்போது Profile Lock என்ற Optionனை நாம் எவ்வாறு செயற்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
உங்களது Android அல்லது iOS சாதனத்தில் Facebook செயலியை திறந்து உள்ளே நுழையவும்.
அதில் Profile படத்தை அல்லது Menu என்பதை Click செய்து உங்கள் பெயரைத் தெரிவு செய்து Profile பக்கத்திற்குச் செல்லவும்.
அதில் Story இல் சேர்க்கவும் என்ற அம்சத்தை அடுத்து உள்ள மூன்று புள்ளிகளை Click செய்து Profile அமைப்பு Menuஐ திறந்து, Profile Lock என்பதை தெரிவு செய்யவும்.
Profile Lock இன் அம்சங்களை விளக்கும் ஒரு திரை தோன்றும்.
உங்கள் Profile ஐ Lock செய்யவும்” என்பதை தெரிவு செய்து அம்சத்தை செயல்படுத்தவும்.
இவ்வாறு Profile Lock செய்வதன் மூலம் அந்நியர்கள் நமது தனிப்பட்ட புகைப்படத்தை அணுகுவதை தடுக்க முடியும்.
அதன் மூலம் நமது Profile மற்றும் Cover Picture, Story மற்றும் பதிவுகளை நண்பர்கள் மட்டுமே பார்க்கும்படியாக இருக்கும்.
தவறான பயன்பாட்டிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும். யாரும் அனுமதியின்றிப் பகிர்வதையும் குறைக்கலாம்.