மீன் உணவு, உடலுக்கு ஆரோக்கியம் தரும் மாமிச உணவாகும். நாம் தொடர்ந்து மீனை உணவாகச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிக்கிறது. மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.
அதுமட்டுமன்றி மீனில் எவ்வளவு சத்து இருக்கிறதோ அதே அளவு மீன் தலையிலும் அதிக சத்துக்கள் உள்ளன.
இதனால் மீன் சாப்பிடும் போது மீன் தலையையும் சேர்த்துச் சாப்பிடுங்கள்.
கண்பார்வையை அதிகரிக்கும், ஞாபக சக்தியும் அதிகரிக்கும். வாரத்துக்கு 2 மற்றும் 3 நாள் மீன் தலை சாப்பிடுவது நல்லது.
மீன் தலை அடிக்கடி சாப்பிடுவதால் மூட்டு வலி,மூட்டு வீக்கம் குறையும் .
நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். மீன் தலையில் (Vitamin-D) இருப்பதால் நீரிழிவு நோய் தீரும்.
மீன் தலையில் இருக்கும் ஒமேகா அமிலம் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கும் தன்மை கொண்டது. இதனால், பக்கவாதம், மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய்கள் தடுக்கப்படுகின்றன