ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் முன்னிலையிலேயே, உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோதப் படையெடுப்பை பிரதமர் மார்க் கார்னி கடுமையாகக் கண்டித்துள்ளார்.
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் (APEC) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தலைவர்களின் உரைகள் இடம்பெற்ற அமர்வின் போது, பிரதமர் கார்னி தனது உரையில் இந்தக் கண்டனத்தைப் பதிவு செய்தார்.
ரஷ்யா மீதான தடைகள் “முற்றிலும் அவசியமானவை” எனவும், அவை ரஷ்யாவை “கடுமையாகப் பாதித்து வருகின்றன” எனவும் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் வரை, ரஷ்யா மீதான தடைகள் உண்மையானவையாகவும் தொடர்ந்து அதிகரித்து வருபவையாகவும் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், உக்ரைனின் எதிர்காலம் தொடர்பான முடிவுகளில் உக்ரைன் முழுமையாக ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதே கனடாவின் நிலைப்பாடு எனவும் பிரதமரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
