தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை நிறுத்தினால் பாதிப்பு ஏற்படும் என கனடா பணி வழங்குவோர் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள் இந்நிலையில் கனடா தனது தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என கனடா எதிர்க்கட்சித் தலைவரான Pierre Poilievre வலியுறுத்தியுள்ளார்.
தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தால் கனேடிய பணியாளர்கள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாகவும், ஊதியங்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளார்.
ஆனால், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை நிறுத்தினால் கிராமப்புற சமுதாயத்தினருக்கு பாதிப்பு ஏற்படும் என கனடா பணி வழங்குவோர் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
நோவா ஸ்கொஷியாவிலுள்ள Victoria Co-operative Fisheries என்னும் நிறுவனத்தின் பொது மேலாளரான Osborne Burke என்பவர், கனடா எதிர்க்கட்சித் தலைவரான Pierre Poilievreக்கு, கிராமப்புறங்களில் வேலை வெற்றிடங்களை நிரப்ப பணி வழங்குவோர் படும் பாடு புரியவில்லை என்பதையே அவரது கூற்று காட்டுவதாக தெரிவித்துள்ளார்.


