அல்பேட்டா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக Samson Cree Nation ல் மூடப்பட்ட நெடுஞ்சாலை 611 தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
எட்மண்டன் நகருக்குத் தெற்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாஸ்க்வசிஸ் அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் நான்கு வீடுகள் எரிந்து சாம்பலாயின.
இதில் Samson Cree Nation இல் இரண்டு வீடுகளும், அருகிலுள்ள Ermineskin Cree Nation இல் இரண்டு வீடுகளும் அடங்கும்.
Samson Cree Nation ஐச் சேர்ந்த புளோரா நார்த்வெஸ்ட் என்ற குடியிருப்பாளரது வீட்டின் அருகே தீ பரவினாலும், தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டை காப்பாற்றினர்.
இருப்பினும், கைவிடப்பட்ட வீடு மற்றும் அவரது சகோதரரின் வீடு தீயில் எரிந்துள்ளது.
இந்தத் தீ காரணமாக மாஸ்க்வசிஸ் தீயணைப்புத் துறை அவசர நிலையை அறிவித்தது.
எட்டு வெவ்வேறு தீயணைப்புத் துறைகளைச் சேர்ந்த வீரர்கள் பல மணி நேரம் போராடி நெருப்புப் பரவுகையை கட்டுப்படுத்தினர்.
தீயால் பாதிக்கப்பட்டவர்கள், மாஸ்க்வசிஸில் உள்ள ஹோவர்ட் பஃபலோ நினைவு மையத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
