Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

ஆசிய சந்தைகளுக்கு செல்லும் கனடாவின் இயற்கை எரிவாயு சரக்கு

ஜூலை 1, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பிரிட்டிஷ் கொலம்பியாவின் கிட்டிமாட் நகரத்தில் உள்ள எல்.என்.ஜி கனடா (LNG Canada) முனையத்திலிருந்து, கனடாவின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) சரக்கு, முதன்முறையாக ஆசிய சந்தைகளுக்குப் புறப்பட்டுள்ளது.

கனடாவின் எரிசக்தி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக நோக்கப்படுகின்றது.

திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றிக் கொண்ட ‘காஸ்லாக் கிளாஸ்கோ’ (GasLog Glasgow) என்ற கப்பல், தென் கொரிய துறைமுகத்திற்குச் சென்றுள்ளது.

கனடாவும், அதன் மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவும் தங்கள் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதியைப் பல்வகைப்படுத்துவதற்கு இது வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்து ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பின் விளைவான இந்த திட்டம், இப்பகுதிக்கு நீண்டகால பொருளாதார ஊக்கத்தை அளிக்கும் என்று கிட்டிமாட் நகர மேயர் பில் கெர்முத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எல்.என்.ஜி கனடா என்பது.., ஷெல் (Shell) மற்றும் மலேசியாவின் பெட்ரோனாஸ் (Petronas), பெட்ரோசைனா (PetroChina), ஜப்பானின் மிட்சுபிஷி கார்ப். (Mitsubishi Corp.) மற்றும் தென் கொரியாவின் கோகாஸ் (KOGAS) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டு முயற்சியாகும்.

எல்.என்.ஜி கனடா வின் முதல் கட்டம் ஆண்டுக்கு 14 மில்லியன் தொன், எரிவாயுவை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

40 பில்லியன் டொலர் பெறுமதியான இந்தத் திட்டம் கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய தனியார் துறை முதலீடாக, கனேடிய மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி அல்பர்ட்டா மாகாணத்தில் பொது வாக்கெடுப்புகளுக்கான விதிகள் தளர்த்தப்படவுள்ளன
அடுத்த செய்தி முக்கியத்துவம் வாய்ந்த கனடா தினம் இன்றாகும்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

மின் கட்டணம் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும் – சஜித்

பிப்ரவரி 25, 2025
கனடாமுதன்மை செய்தி

டொராண்டோவில் வாகன விபத்து – இருவர் படுகாயம்

அக்டோபர் 20, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகர கணக்காய்வாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை

நவம்பர் 4, 2025
கனடாமுதன்மை செய்தி

“தேசத்தைக் கட்டியெழுப்பும்” திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க பிரதமர் திட்டம்

செப்டம்பர் 11, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?