மேல் மாகாணத்தில் மட்டும் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 371 தீ விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகத் தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் அனைவரும் புகையைச் சுவாசித்தமையினால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
திடீர் தீ விபத்து ஏற்பட்டால் விரைவாக அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு தீயணைப்புச் சேவைகள் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட அபாயகரமான பொருட்களைத் தரமான முறையில் பராமரிக்குமாறும் அத்திணைக்களம் பொதுமக்களிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.
