வவுனியாவில் தைப் பொங்கலை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள்
உழவர் திருநாளான தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றன.
அதற்கிணங்க, வவுனியாவின் பிரதான ஆலயங்களில் ஒன்றாகிய கந்தசாமி ஆலயத்தில் புதுப் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் இடம்பெற்றதுடன், ஆலய பிரதம குரு தலைமையில் விசேட பூசையும் இடம்பெற்றது.