Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு தொடர்பாக – மற்றொரு சந்தேக நபர் கைது!

அக்டோபர் 3, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தெஹிவளை ரயில் நிலைய வீதிக்கு அருகில் நடந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக மற்றொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர், துப்பாக்கிச்சூடு நடத்த வந்த மோட்டார் சைக்கிள் சாரதி எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவரிடமிருந்து 5 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஐந்து வாள்கள், ஒரு கத்தி மற்றும் 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றைப் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான கொஸ் மல்லி, பஸ் அசிதவை சுட்டுக் கொலை செய்ய 700,000 ரூபாய் கொடுத்ததாகத் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்தப் பணத்தில் 350,000 ரூபாயை ஒரே நேரத்தில் தனது கணக்கில் வைப்பிலிடப் பட்டதாகவும், மீதமுள்ள பணத்தை அவ்வப்போது பெற்றதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சந்தேக நபரின் வீட்டை சோதனை செய்தபோது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்கள் மற்றும் ஒரு கத்தி கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பாக நடத்திய விசாரணையில், படோவிட்ட அசங்கவின் நெருங்கிய நண்பர்களான பொரலஸ்கமுவே தினுகவை கொலை செய்ய, கொஸ் மல்லி அவருக்கு ஆயுதங்களை வழங்கியதாகத் தெரியவந்தது. மேலதிக விசாரணையில், தெஹிவளை துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு சந்தேக நபர் தனது வீட்டை விட்டு வெளியேறி, தென் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்ததாகத் தெரியவந்தது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏழு நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

முந்தைய செய்தி பிரான்ஸில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு!
அடுத்த செய்தி வெல்லவாய பகுதியில் மரத்துடன் வேன் மோதி விபத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கைமுதன்மை செய்தி

நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து ஜனாதிபதியின் கருத்து…

பிப்ரவரி 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காரைநகரில் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

ஜூலை 4, 2025
இலங்கை

இந்திய கடற்தொழிலாளர்கள் 11 பேர் விளக்கமறியலில் – இருவர் தொடர்ந்து வைத்திய சிகிச்சையில்

பிப்ரவரி 3, 2025
இலங்கை

கொழும்பு பங்குச் சந்தையில் வீழ்ச்சி!

ஆகஸ்ட் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?