Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற இரண்டாம் மொழி கற்கை நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

ஜனவரி 14, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (NILET) ZOOM தொழில்நுட்பம் ஊடாக வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்காக மேற்கொண்ட 100 மணித்தியாலம் மற்றும் 150 மணித்தியால இரண்டாம் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வு நேற்று (13) மன்னார் நகரசபை கலாசார மண்டபத்தில் மன்னாரில் பிரபல்யமான இரண்டாம் மொழி ஆசிரியையும், சிரேஸ்ர இரண்டாம் மொழிப்பாட தேசிய மட்ட வளவாளருமான திருமதி இந்துனில் சாகரிகா பிகிறாடோ தலைமையில் இடம் பெற்றது.

2020 ஆண்டு அரச கரும மொழி அமைச்சினால் வெளியிடப்பட்ட 18 ம் இலக்க சுற்றறிக்கைக்கு அமைவாக அரச உத்தியோகத்தர்களின் மொழி புலமையை விருத்தி செய்யும் முகமாக மேற்கொள்ளப்பட்ட பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பயிலுனர்கள் 175 பேருக்கு மேற்படி சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NILET) கல்வி மற்றும் ஆய்வு அதிகாரி திருமதி.பாலரஞ்சனி காந்தீபன், தேசிய இணைப்பாளர் திரு டிலான் ரணசிங்க அவர்களும், தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NILET) மத்திய மாகாண இணைப்பாளர் திரு சமீர அத்தப்பத்து ,மன்னார் மாவட்ட மொழி இணைப்பாளர் திருமதி சிந்துஜா சில்வா, மற்றும் இரண்டாம் மொழி பாட வளவாளர்களாகிய திரு ஈ.எஸ்.கே.ரோச், செல்வி சுபாஷினி விநாயகமூர்த்தி, திருமதி வீ.சர்மினி ஆகியோர் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

குறித்த நிகழ்வில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறிகளை பூர்த்தி செய்த பயிலுனர்களால் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.

அதே நேரம் புதிய இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியானது (Zoom தொழில் நுட்பம், மற்றும் நேரடி வகுப்பு) ஆரம்பிக்க உள்ள நிலையில் பயிற்சி நெறியை தொடர விரும்புவோர் 0776355521 இரண்டாம் மொழி வளவாளர் திருமதி இந்துனில் சாகரிக்கா அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி வெண் பொங்கலை ஒருடைம் இந்த மாதிரி செய்து பாருங்க….
அடுத்த செய்தி வவுனியாவில் தைப் பொங்கலை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

ஹட்டன் குடகம பகுதியில் மண்சரிவு அபாயம்!

செப்டம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் வெசாக் கொண்டாட்டம்….

மே 12, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் – யாழில் கைதானவர்களிடமிருந்து வெளியாகிய உண்மை !

நவம்பர் 9, 2025
இலங்கை

ஒட்டுசுட்டானில் சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்களால் நெற் களஞ்சியசாலைகளில் துப்பரவு பணிகள் முன்னெடுப்பு!

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?