Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியலில் கனடா மால்டிங் தொழிற்சாலையின் ஒரு பகுதி அகற்றம்!

அக்டோபர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொண்ட்ரீயல் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்றான ‘கனடா மால்டிங்’ (Canada Malting) தொழிற்சாலைக் கட்டடம், இடிந்து விழும் அபாயம் உள்ளதாகப் பொறியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளதை அடுத்து, அதன் ஒரு பகுதி உடனடியாகப் பிரிக்கப்படவுள்ளது.

இப் பணிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொண்ட்ரீயல் நகரின் சட்-வெஸ்ட் (Sud-Ouest) பகுதியில், லாச்சின் கால்வாயை (Lachine Canal) ஒட்டியுள்ள இந்த நூற்றாண்டு பழமையான தொழிற்சாலைக் கட்டடம் பல தசாப்தங்களாகப் பயன்பாடின்றி கைவிடப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பொறியியல் அறிக்கை ஒன்றில், இக் கட்டடம் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு “உடனடி ஆபத்தை” (imminent danger) ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கட்டடத்தின் மேற்பகுதியிலிருந்து கழன்றுள்ள செங்கல் முகப்புச் சுவர் (brick facade wall) எந்த நேரத்திலும் செயின்ட்-அம்ப்ரோயிஸ் வீதியின் (St-Ambroise Street) மீது இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனால் பாதசாரிகளுக்குப் பலத்த காயம் ஏற்படலாம் எனவும், அப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்கள் சேதமடையலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

கட்டடத்தைப் பராமரிக்கும் ‘Développement La Malterie S.E.C.’ நிறுவனத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்துள்ள சொத்து மேம்பாட்டாளர் நோஆம் ஷ்னிட்சர் (Noam Schnitzer), வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அடையாளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மிகுந்த கவனத்துடன் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

இப் பணிகள் சுமார் ஐந்து நாட்கள் நீடிக்கும் எனவும், அதனைத் தொடர்ந்து கனரக உபகரணங்களை அகற்றுவதற்கு மேலும் மூன்று நாட்கள் தேவைப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி கியூபெக்கில் Parti Québécois உறுப்பினர்கள் பதவியேற்பு!
அடுத்த செய்தி கியூபெக்கில் விமானி அறைக்குள் பலவந்தமாக நுழைய முயற்சி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

லயன் நிறுவன மின்சாரப் பள்ளிப் பேருந்துகள் மீது பாதுகாப்புச் சோதனைகள் முன்னெடுப்பு

செப்டம்பர் 16, 2025
கியூபெக்முதன்மை செய்தி

Jacques-Cartier மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தற்காலிகக் கூடாரம் ஒன்றிற்குள் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்பு

ஜூன் 26, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடா மீதான வரி விதிப்பில் அமெரிக்கா மீண்டும் பணக்காரர் ஆகும்-டொனால்ட் ட்ரம்ப்

பிப்ரவரி 25, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் 8 பேருக்கு தட்டம்மை வைரஸ் உறுதி

டிசம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?