கியூபெக் மாகாணத்தில், Parti Québécois கட்சியின் 59 சட்டமன்ற உறுப்பினர்களும் இன்று பதவியேற்றுள்ளனர்.
கியூபெக் தேசியச் சட்டமன்றத்தின் செஞ்சபையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உறுப்பினர்கள் கியூபெக் மக்களுக்கு விசுவாசம் தெரிவிக்கும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
கடந்த ஒக்டோபர் 5ஆம் திகதி நடைபெற்ற மாகாணத் தேர்தலில், பால் செயின்ட்-பியர் பிளாமண்டன் தலைமையிலான Parti Québécois கட்சி 59 இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் அக்கட்சி சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்கவுள்ளது.
கியூபெக் மாகாணத்தில் 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் Parti Québécois மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பட்டியல் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
இதற்கிடையில், கியூபெக் லிபரல் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வுகளும் அடுத்த வாரம் நடைபெறவுள்ளன.
கனடாவின் கியூபெக் மாகாண அரசியலில் புதிய அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
