கடந்த வாரம் மொன்றியலில் நடந்த தீ விபத்திற்குப் பிறகு, லயன் நிறுவனத்தின் மின்சாரப் பள்ளிப் பேருந்துகள் மீதான பாதுகாப்புச் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனால், கியூபெக் மாகாணத்தில் பள்ளி மாணவர்களின் போக்குவரத்துச் சேவைகள் இரண்டாவது நாளாகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான பேருந்துகள் இன்றும் இயக்கப்படவில்லை எனத் தெரியவருகின்றது.
லயன் நிறுவனம் திங்கட்கிழமை முதல் தமது சேவை படிப்படியாகத் தொடங்கும் என வெள்ளிக்கிழமை அறிவித்த போதிலும், பெரும்பாலான பேருந்துகள் போக்குவரத்துக்குத் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
