நாட்டில் முதன்முறையாக, அல்பர்ட்டா மாகாணத்தில் ஓட்டுனர் உரிமங்கள் மற்றும் அடையாள அட்டைகளில் “கனடிய குடியுரிமை அடையாளங்கள்” (Canadian citizenship markers) சேர்க்கப்பட உள்ளதாக மாகாண அரசு அறிவித்துள்ளது.
இந்த கட்டாய மாற்றம் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைமுறைக்கு வரும் என மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை தகவலை ஓட்டுனர் உரிமங்களில் சேர்ப்பதன் மூலம், அல்பர்ட்டா மக்கள் அரசின் சேவைகளான மாணவர்களுக்கான நிதி உதவி, சுகாதாரப் பலன்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் போன்றவற்றை எளிதாகப் பெற முடியும் என அல்பர்ட்டா முதல்வர் டேனியல் ஸ்மித் விளக்கினார்.
மேலும், “ஒரே ஆவணத்தின் மூலம் ஒருவர் தனது அடையாளத்தையும், குடியுரிமையையும் நிரூபிக்க முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாற்றமானது தேர்தல்களின் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் குடியுரிமை இல்லாதவர்களுக்கு இந்த அடையாளங்கள் அட்டைளில் இடம்பெறாது என்றும் அல்பர்ட்டா அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
