Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்முதன்மை செய்தி

இஸ்ரேல் பேருந்துகளில் தொடர் குண்டுவெடிப்பு.

பிப்ரவரி 21, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இஸ்ரேலில் நேற்று (வியாழக்கிழமை) இரவு பேருந்துகளில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. மத்திய இஸ்ரேல், டெல் அவிவ் அருகே ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பேருந்துகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளன.

மேலும் இரண்டு பேருந்துகளிலும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும், குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் பேருந்துகள் காலியாக நிறுத்தப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை.

குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து இஸ்ரேலிய காவல்துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் அனைத்து முக்கிய இஸ்ரேலிய நகரங்களிலும் பேருந்துகள் மற்றும் ரெயில்களில் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

பேருந்து குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அவசர பாதுகாப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காவல்துறை முதற்கட்ட அறிக்கையில், இவை சந்தேகத்திற்குரிய பயங்கரவாத தாக்குதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குண்டுகள் அதே பாணியில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் நேரக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் பிணை கைதிகள் பரிமாற்றம் நடந்து வரும் சூழலில் இந்த குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. பணய கைதிகள் 33 பேரில் சிலர் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்தது.

போரின்போது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் இஸ்ரேலிய பிணை கைதிகளின் உடல்களை நேற்று இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

 

முந்தைய செய்தி கனடாவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம்!
அடுத்த செய்தி துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆணொருவர் சடலம் மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

பொருட்களின் விலைகளை குறைக்க ட்ரம்ப் நடவடிக்கை!

நவம்பர் 15, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒட்டாவா நகரத்தின் புறநகர்ப் பகுதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்பான கோரிக்கைகள் முன்வைப்பு !

மே 28, 2025
உலகம்

பாகிஸ்தானில் கன மழையால் – 200க்கும் மேற்பட்டோர் பலி!

ஜூலை 21, 2025
உலகம்

ர‌‌ஷ்யப் படைகள் உக்ரைனில் திடீரென்று முன்னேற்றம்!

ஆகஸ்ட் 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?