டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க்கின் கொலைச் சம்பவத்தோடு தொடர்புடைய அனைவரையும் அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை பற்றிய விசாரணையில் ஈடுபட்டுள்ள
FBI அதிகாரிகள், சந்தேக நபரின் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள காடு போன்ற பகுதியில் இருந்து உயர் ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக FBI விசேட முகவர் றொபர்ட் போல்ஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
இந்த தாக்குதல் முற்றிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும்
சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து கை இரேகைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் அவை விசாரணைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் புகைப்படத்தில் இருப்பவரை குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 100,000 டொலர் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
