கனடாவில் பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடா 5 லட்சம் மனித பறவை காய்ச்சல் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் மருந்துப் பொருள் நிறுவனம் GSK தயாரித்த இந்த தடுப்பூசிகள், அவசியமான தருணங்களில் பயன்படுத்துவதற்கு முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கையாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பறவை காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் தற்போது குறைவாக உள்ளது என பொது சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கும் இதேவேளை, அதிகப் பாதிப்பு அடையக்கூடிய நபர்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ம் ஆண்டு நவம்பர் மாதம் கனடாவில் முதன்முறையாக ஒரு நபருக்கு H5N1 வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
உலகளவில் பறவை காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், கோடைகாலதில் பறவைகளின் இடம்பெயர்ச்சி (Spring Migration) மூலம் வைரஸ் மேலும் பரவலாம் எனும் அச்சம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.