கொத்தமல்லி விதை என்னும் தனியா பல வகையில் ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடியது. செரிமானத்தை வலுப்படுத்துவது முதல், இதய ஆரோக்கியம் வரை இதில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். கொத்தமல்லி விதைகளில் விற்றமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் ஏ, சி, ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ள நிலையில், தனியா நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தியில் கூறுவோம்.
வெயிட் லாஸ் பானம்
கொத்தமல்லி விதை நீர் உடல் கொழுப்பை எரிக்க உதவுகிறது. இதனால் உடல் எடை படிப்படியாக குறைகிறது. இது நச்சுக்களை நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதால், உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இது மெட்டபாலிஸம் என்னும் வளர்சிதை மாற்றத்தை தூண்டி எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
இதய ஆரோக்கியம்
கொத்தமல்லி விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது இதயம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும்.
செரிமான ஆரோக்கியம்
கொத்தமல்லி விதை நீர் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. வாயு, வீக்கம் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. கொத்தமல்லி விதைகளில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் உள்ளன, இது வயிற்று தசைகளை தளர்த்தி சரியான செரிமானத்தை தூண்டுகிறது.
உயர் ரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தனியா வரப்பிரசாதம் எனலாம். இதில், நார்ச்சத்தும், பொட்டாசியமும் உள்ளதால், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த செய்கிறது.. இதை சாப்பிடுவதன் மூலம் இதயம் தொடர்பான ஆபத்தான நோய்களையும் குணப்படுத்தலாம்
இரத்த சர்க்கரை அளவு
கொத்தமல்லி விதை நீர் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். இது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லி விதை நீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
மேலும் படிக்க | ஒரு நொடியில் ரத்த சர்க்கரை கட்டுப்பட..இந்த பொடிப்போதும்! நைட் தூங்கும்போது இதை மட்டும் செய்யுங்க!
சரும ஆரோக்கியம்
கொத்தமல்லி விதைகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன, இது பருக்கள், முகப்பரு மற்றும் சரும எரிச்சல் போன்ற சருமம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கும். இது சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியம்
தனியாவில் உள்ள தைமால் என்ற என்சைம் உடலின் கால்சியம் உறிஞ்சும் திறனை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் கே எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் வராமல் தடுக்கப்படுவதோடு, எலும்பு முறிவு ஏற்படும் அபாயமும் குறைகிறது.
சிறுநீரக ஆரோக்கியம்
கொத்தமல்லி விதை நீர் சரியான சிறுநீரக செயல்பாட்டை பராமரிக்க உதவுகிறது. இது சிறுநீரகத்தில் குவிந்துள்ள தீங்கு விளைவிக்கும் கூறுகளை அகற்ற உதவுகிறது, இது சிறுநீரக கல் உருவாகும் அபாயத்தையும் குறைக்கிறது.
கொத்தமல்லி விதை நீர் தயாரிக்கும் முறை
கொத்தமல்லி விதை தண்ணீர் தயாரிக்க, ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, இரவு முழுவதும் அப்படியே விடவும். இப்போது அதை காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். இப்படி தினமும் செய்து வந்தால் பலன்கள் கண் கூடாக தெரிய ஆரம்பிக்கும்.