எமது அன்றாட உணவுமுறைகளில் மருத்துவ குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் உட்பட பல உடல் நலப் பிரச்சினைகளை தடுக்கலாம்.
கருஞ்சீரகம் சளி, இருமல் மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டதுடன், மாதவிலக்கு பிரச்சினையையும் தீர்க்கவல்லது.
பெண்கள் பிரசவத்துக்குப் பின்னர் கர்ப்பப்பையில் சேரும் அழுக்கை நீக்க, ஒரு டேபிள்ஸ் பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.
இன்றைய காலகட்டத்தில் பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் சர்க்கரை நோயை தடுக்கவும் மற்றும் சர்க்கரை நோயாளிகள் தங்களுடைய இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்கவும் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம்.