அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றி, அந்த நாட்டு உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், அதனால் கனடாவின் எண்ணெய் சந்தைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
பாரிஸில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கனடாவின் எண்ணெய் குறைந்த செலவு, குறைந்த ஆபத்து மற்றும் தூய்மையானது என்று உறுதிபடத் தெரிவித்தார். சமீபத்தில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் பிடிக்கப்பட்டார். அதன் பிறகு, அங்குள்ள எண்ணெய் கிணறுகளைச் சீரமைத்து, உலகச் சந்தைக்கு மீண்டும் வெனிசுலாவின் கச்சா எண்ணெயைக் கொண்டு வரப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
வெனிசுலாவின் எண்ணெயும் கனடாவின் எண்ணெயும் ஒரே தன்மையைக் கொண்டவை என்பதால், இது கனடாவிற்குப் பெரும் போட்டியாக அமையும் என அஞ்சப்படுகிறது அரசியல் குழப்பங்கள் நிறைந்த வெனிசுலாவை விட, கனடா ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான நாடு என்று தெரிவித்துள்ள பிரதமர் மார்க் கார்னி, முதலீட்டாளர்கள் கனடாவையே அதிகம் நம்புவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


