Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

இடைக்காலத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிடும் CAQ கட்சி!

அக்டோபர் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத் தேர்தலில் ‘கோலிஷன் அவெனிர் கியூபெக்’ (CAQ) கட்சி ஒரு ஆசனத்தைக்கூடக் கைப்பற்ற முடியாமல் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

கடந்த 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்த இக்கட்சி, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் 5 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற போதிலும், தேசிய சட்டமன்றத்தில் எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, கட்சியின் தலைவரான கிறிஸ்டின் பிரெசெட் (Christine Fréchette) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து, இம்மாதம் 17ஆம் திகதி கட்சியின் நிர்வாகக் குழுவினர் இடைக்காலத் தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கவுள்ளதாக நிர்வாக இயக்குநர் பிரிஜிட்டா லெகால்ட் (Brigitte Legault) தெரிவித்துள்ளார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் இடைக்காலத் தலைவர், கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அடுத்த கட்டத் தலைமைப் போட்டியை நடத்துவதற்கான பொறுப்பை ஏற்பார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தலைமைப் பொறுப்பை ஏற்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், ரிச்மண்ட் தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் குய்லோம் ரூசோ (Guillaume Rousseau) போட்டியில் களமிறங்குவது குறித்து பரிசீலித்து வருகிறார்.

இதேவேளை, 59 இடங்களைக் கைப்பற்றியுள்ள Parti Québécois கட்சி, கியூபெக் மாகாணத்தில் சிறுபான்மை அரசை அமைக்கவுள்ளது.

CAQ கட்சி பிற கட்சிகளுடன் இணைக்கப்படுமா என்ற விவாதங்கள் எழுந்தபோதிலும், அதுமுதிர்ச்சியற்ற உரையாடல் எனப் பிரிஜிட்டா லெகால்ட் மறுத்துள்ளார்.

சட்டமன்றத்தில் பிரதிநிதிகள் இல்லாவிட்டாலும், தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் கியூபெக் தேர்தல் சட்டத்தின்படி CAQ கட்சிக்கு ஆண்டுக்குச் சுமார் 1.7 மில்லியன் டொலர்கள் வரை நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி கியூபெக்கின் எதிர்காலம் தொடர்பான அரசாங்கத்தின் முடிவுகள்!
அடுத்த செய்தி கியூபெக்கில் மருத்துவர்களின் பற்றாக்குறை அதிகரிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

SNC-Lavalin-இன் முன்னாள் கட்டுமானப் பிரிவுத் தலைவரருக்கு கூடுதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஏப்ரல் 8, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியலில் மரதன் போட்டி — வார இறுதியில் ஏற்படும் போக்குவரத்து மாற்றங்கள்!

அக்டோபர் 9, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் லோரியர் மெட்ரோ அருகே கத்திக்குத்து தாக்குதல் – சந்தேக நபர் கைது

மார்ச் 13, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

பே-சென்ட்-போல் கொலை: 60 வயது நபர் கைது!

அக்டோபர் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?