Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் மருத்துவர்களின் பற்றாக்குறை அதிகரிப்பு!

அக்டோபர் 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE
கியூபெக் மாகாணத்தில் உள்ள ஒடாவா (Outaouais) பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான மருத்துவர்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு, புதிய அரசாங்கம் அமைக்கவுள்ள தரப்பிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த மருத்துவர்கள் சங்கம், கியூபெக்கில் புதிதாக பதவியேற்கவுள்ள Parti Québécois கட்சியினரிடம் இந்தப் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரியுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கியூபெக்கின் முன்னைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட ‘மசோதா 2’ (Bill 2) சட்டமாக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டது.
மருத்துவர்களின் ஊதியத்தை அவர்கள் பார்க்கும் நோயாளிகளின் எண்ணிக்கையுடன் இணைக்கும் இந்தச் சட்டத்தினால், அப்பகுதியைச் சேர்ந்த 24 குடும்ப மருத்துவர்கள் கியூபெக் மாகாணத்தை விட்டு வெளியேறினர்.
இதனை அடுத்து, அப்பகுதியில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்ப மருத்துவர்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த சர்ச்சைக்குரிய சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னரே அப்பகுதியில் மருத்துவர்களின் எண்ணிக்கை தேக்கமடைந்துவிட்டதாக அப்பகுதி பொது மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் கியோம் கார்போனோ (Guillaume Charbonneau) தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்யக் கூடுதலாக சுமார் 100 குடும்ப மருத்துவர்கள் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட கார்போனோ, செப்டம்பர் 2026 நிலவரப்படி 123,200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் குடும்ப மருத்துவர்கள் இன்றி அவதிப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
முந்தைய செய்தி இடைக்காலத் தலைவரைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிடும் CAQ கட்சி!
அடுத்த செய்தி மொன்றியல் மற்றும் மொன்டேரியி பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

பனிமழை (Ice Storm) காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மொன்றியல் நகரம்

மார்ச் 12, 2026
கியூபெக்முதன்மை செய்தி

Exo போக்குவரத்து நிறுவனம் ஊழியர் எண்ணிக்கையில் 11 சதவீதத்தைக் குறைக்க முடிவு

ஜனவரி 27, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கிளாடியா ஐகோனோ கொலை வழக்கில் இரண்டு நபர்களுக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஜனவரி 28, 2026
கனடாமுதன்மை செய்தி

தமது சொந்த தொகுதியில் தோல்வியடைந்தார் பியர் பொய்லிவர்….

ஏப்ரல் 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?