கடந்த 2023-ஆம் ஆண்டு மொன்ட்ரியல் நகரையே உலுக்கிய கிளாடியா ஐகோனோ (Claudia Iacono) கொலை வழக்கில், தொடர்புடைய இரண்டு நபர்களுக்கு தலா 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள கிலால் நெஸ்பீல்ட் மற்றும் டைரேன் ஆண்ட்ரே கிரீனிட்ஜ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் உண்மையை ஒப்புக்கொண்டனர்.
இவர்கள் உண்மையில் கிளாடியாவைக் கொல்ல வரவில்லை என்றும் கிளாடியாவின் கணவரான அந்தோணி காலோவை (Anthony Gallo) சுட்டுக்கொல்லவே திட்டம் தீட்டியிருந்தனர் என்றும் தெரியவந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு மே 16 அன்று, பகல் நேரத்தில் கிளாடியா தனது ‘சலூன் டிவில்’ (Salon Deauville) என்ற அழகு நிலையத்திலிருந்து காரில் கிளம்பியபோது, மிக அருகில் வைத்து சுடப்பட்டார்.
அந்தோணி காலோ தனக்கும் மாஃபியா கும்பலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தான் முறையாகத் தொழில் செய்து வருவதாகவும் தொடர்ந்து கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
