மொன்ட்ரியலின் புகழ்பெற்ற ‘டக்ளஸ் மனநல பல்கலைக்கழக மருத்துவமனையில்’ (Douglas Mental Health University Institute) ஏற்பட்ட பெரும் நீர் கசிவு காரணமாக, பல கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பல ஆண்டுகால ஆராய்ச்சி முடிவுகள் சேதமடைந்துள்ளன.
கடந்த திங்கட்கிழமை, மருத்துவமனையின் ‘லேமன் பவிலியன்’ (Lehmann Pavilion) கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் இருந்த தீயணைப்புத் தெளிப்பான் (Sprinkler system) குழாய்கள் திடீரென வெடித்தன.
100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்தக் கட்டடத்தில், கடும் குளிரின் காரணமாக உறைந்த நீர் விரிவடைந்ததே இந்த விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தால் மருத்துவமனையின் நான்கு முக்கிய ஆராய்ச்சி ஆய்வகங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
