Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

நோவா ஸ்கோஷியாவில் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

ஜூன் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் மஸ்கோடோபோயிட் துறைமுகம் (Musquodoboit Harbour) அருகே ஒஸ்ட்ரியா ஏரி சாலை (Ostrea Lake Road) பகுதியில் தொடங்கிய இந்தக் காட்டுத்தீ, அப்பகுதியில் வசித்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை வெளியேறச் செய்திருந்தது.

தற்போது, தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையால் நிலைமை சீரடைந்துள்ளதாகவும், சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஹாலிஃபாக்ஸ் தீயணைப்பு மற்றும் அவசர சேவை (Halifax Fire and Emergency), காவல்துறை (RCMP) மற்றும் இயற்கை வளங்கள் திணைக்களம் (Department of Natural Resources) ஆகியன இணைந்து, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தன.

ஹாலிஃபாக்ஸ் தொழில்முறை தீயணைப்பு வீரர்கள் சங்கம் (Halifax Professional Fire Fighters association) ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் வெளியிட்ட அறிவிப்பில், “நிலைமை சீரடைந்துவிட்டது” என்றும், “பணியாளர்கள் படிப்படியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர்” என்றும் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி யோர்க் (North York) பகுதியில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு
அடுத்த செய்தி 16 வருடங்களாக மகனை தேடி அலையும் தாய்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

மனோட்டிக் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

பிப்ரவரி 13, 2026
1
கனடாமுதன்மை செய்தி

கியூபா பிரஜையை கைது செய்த கனடிய அதிகாரிகள்…

ஏப்ரல் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

புதிய ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக அவி லூயிஸ் தெரிவு

மார்ச் 30, 2026
கனடாமுதன்மை செய்தி

தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் டேவிட் மிகாயேல் ஹென்ஷல்

ஜூலை 18, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?