ஓன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்டின் (Doug Ford) பயன்பாட்டிற்காக அண்மையில் வாங்கப்பட்ட 28.9 மில்லியன் டொலர் பெறுமதியான தனிப்பட்ட ஜெட் விமானத்தை உடனடியாக விற்பனை செய்ய ஓன்ராறியோ மாகாண அரசு தீர்மானித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இந்த ஆடம்பரக் கொள்வனவுக்கு எதிராகப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க விமானத்திற்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடுவதற்கு இது சரியான நேரமல்ல என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாக, முதல்வர் டக் ஃபோர்ட் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த விமானத்தை மிக விரைவாக விற்றுவிடுவதற்கு ‘பம்பார்டியர்’ (Bombardier) நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட்டின் (Doug Ford) இந்த மனமாற்றத்தை ஒரு அரசியல் நாடகம் என, எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
மேலும், தற்போது அவசரமாக இந்த விமானத்தை விற்பனை செய்வதால், மக்கள் வரிப்பணத்தில் நஷ்டம் ஏற்படக்கூடும் என்று, லிபரல் கட்சியின் இடைக்காலத் தலைவர் ஜோன் ஃப்ரேசர் எச்சரித்துள்ளார்.
