ஒட்டாவாவில் ஜூலை 31 அன்று நிகழ்ந்த சிறிய விமான விபத்துக்கான காரணம் கண்டறிய உதவும் முக்கிய விமான பாகம் ஒன்று தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த விமானப்பாகமானது விபத்து நடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காவல்துறையின் கைகளில் இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தற்போது கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உரிய காலத்தில் இந்த விமானப்பாகம் கிடைத்திருக்காமை ஆனது, விசாரணையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
