கனடாவுக்கு வெளியே பிறந்த கனடியர்களின் citizenship certificate விண்ணப்பங்களைச் செயல்படுத்துவதில் நீண்டகால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடிய குடியுரிமையை நிரூபிக்க தேவையான certificate-ஐ பெறுவதற்காக விண்ணப்பித்துள்ள சிலர், பல ஆண்டுகளாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, வெளிநாடுகளில் பிறந்தவர்களுக்கு கனடிய குடியுரிமை தொடர்பான விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பின்னர் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் Immigration, Refugees and Citizenship Canada எனப்படும் IRCC மீது விண்ணப்பங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது.
Citizenship certificate என்பது கனடிய குடியுரிமையை நிரூபிக்கப் பயன்படுத்தப்படும் முக்கிய ஆவணமாகும்.கடவுச்சீட்டு(Passport) பெறுவது, குடியுரிமை தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணங்களை சமர்ப்பிப்பது உள்ளிட்ட பல தேவைகளுக்கு இந்த certificate முக்கியமானதாக இருக்கக்கூடும்.
தற்போது நீண்டகாலமாக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள், தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை குறித்து கவலை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த தாமதத்தை குறைக்க கனடிய அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது தொடர்ந்து கவனிக்கப்படுகிறது.

