Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இடமாற்றம் வழங்கியும் அதே பாடசாலையில் கையொப்பம் இடவைக்கும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை!

செப்டம்பர் 23, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

இடமாற்றங்களுக்கு அமைவாக வலயக் கல்விப் பணிப்பாளர்களால் விடுவிப்பு வழங்கப்பட்ட பின்னரும் அதே பாடசாலைகளில் ஆசிரியர்களை கையெழுத்திட அனுமதிக்கும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் இலங்கை அதிபர் சேவைச் சங்கம் என்பவற்றுடன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க, இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், பிரதியமைச்சருமான பிரதீப் சுந்தரலிங்கம், ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

சந்திப்பின் போது, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளை இன்னும் விரைவாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதேவேளை, ஒழுக்காற்று விசாரணைகளும் அதிகரித்துச் செல்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கொள்கையை விரைவாகத் தயாரிக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அது 2027ஆம் ஆண்டு இடமாற்றத்திலிருந்து நடைமுறையாகும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. அதிபர்களுக்கான இடமாற்றக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ள போதும் அதனுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டமையடுத்து, தொடர்புடைய தொழிற்சங்களுடன் கலந்துரையாடிய பின்னர் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

அதேநேரம் தற்போது வழங்கப்பட்ட ஆசிரிய இடமாற்றங்களுக்கு அமைவாக வலயக் கல்விப் பணிப்பாளர்களால் விடுவிப்பு வழங்கப்பட்ட பின்னரும் அதே பாடசாலைகளில் கையெழுத்திட அனுமதிக்கும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் கேள்வி எழுப்பப்பட்டது.

வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறினால் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஆளுநரிடம் வலியுறுத்தினர்.

அதேநேரம், மாகாண ரீதியாக சில பாடங்களுக்கு ஆசிரிய ஆளணி மேலதிகமாக உள்ளது. அத்தகைய பாடங்களுக்கு எந்தவொரு பாடசாலைகளிலும் ஆசிரிய வெற்றிடம் இருக்கக் கூடாது. இதை சீர் செய்யுமாறு தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்கு அமைவாக இரு வாரங்களுக்கு இதனைச் சீர் செய்யுமாறு வலயக் கல்விப் பணிப்பாளர்களை ஆளுநர் பணித்தார்.

மேலும், வடக்கு மாகாணத்தை சொந்த இடமாகக் கொண்டு வெளி மாகாணங்களில் நீண்ட காலம் கற்பிக்கும் ஆசிரியர்களை மாகாணத்துக்குள் உள்வாங்குவதற்கான பொறிமுறை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இறுதியாக மேற்கொள்ளப்பட்ட அதிபர் நியமனங்களில் இன்னமும் கடமைகளைப் பொறுப்பேற்காத அதிபர்களின் விவகாரமும் ஆராயப்பட்டது. இது தொடர்பில் குழு நியமித்து அதன் முடிவை ஆளுநருக்கு அறிவிப்பதென்று கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் ஆசிரியர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் அவர்களின் ஓய்வூதியம் இழுத்தடிக்கப்படுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. ஆசிரியர்கள் ஓய்வுபெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே அவர்களது கோவைகளைப் பார்வையிட்டு ஓய்வுபெற்று ஒரு மாதத்துககுள் அவர்களுடைய ஓய்வூதியம் கிடைப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்ய வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தினார்.

முந்தைய செய்தி தியாக தீபம் திலீபனின் 09ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்!
அடுத்த செய்தி யாழில் இடம்பெற்ற தொழில் சந்தையில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் – வெளியான அதிர்ச்சி தகவல்!

செப்டம்பர் 24, 2025
அண்மைய செய்திகள்உலகம்

விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் – ட்ரம்ப்

மே 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

படையினரை காட்டிக்கொடுத்துவிட்டார் பொன்சேகா -உதய கம்மன்பில தெரிவிப்பு!

அக்டோபர் 16, 2025
இலங்கை

பேக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியல் காலம் நீடிப்பு!

செப்டம்பர் 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?