காலி – கொழும்பு பிரதான வீதியில் உள்ள பயாகல பகுதியில்
பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து சம்பவமானது இன்றைய தினம் காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்தானது ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தின் பின்புறத்தில் உந்துருளி மோதியதில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந் நிலையில் விபத்தில் காயமடைந்த உந்துருளியின் ஓட்டுநர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாகப் பேருந்தின் ஓட்டுநர் கைது செய்யப்பட்ட நிலையில் ,பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.