பாணந்துறை, வேக்கட மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் கடைக்கு முன்பாக கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு உதவிய மற்றும் துணைப்புரிந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இச் சம்பவம் குறித்து தெரிய வருகையில்,
பாணந்துறையைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு இச் சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ளதாக பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரும் நேற்று இரவு சந்தேக நபரின் வீட்டில் தங்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
