தொடர் மழை காரணமாக பல இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள 2 ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு, காலி, கண்டி, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள 1 ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

