கனடா பிரதமர் Mark Carney, கியூபெக்கின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட Paul St-Pierre Plamondon உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கியூபெக் தேர்தலில் Parti Québécois வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கனடா மற்றும் கியூபெக் அரசுகளுக்கு இடையிலான உறவு, பொருளாதார வளர்ச்சி, உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் வர்த்தக சவால்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
குறிப்பாக, அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
கியூபெக் புதிய அரசாங்கம் மாகாணத்தின் அதிகாரங்கள் மற்றும் தனித்துவமான அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்தும் நிலையில், Ottawa மற்றும் Québec இடையிலான உறவு வரும் காலங்களில் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கியூபெக் சுதந்திரம் தொடர்பான விவாதமும் மீண்டும் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதனால் Mark Carney அரசாங்கத்துக்கும் புதிய PQ அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு எவ்வாறு அமையும் என்பது கனடா அரசியலில் கவனிக்கப்படும் விடயமாகியுள்ளது.

