Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

யோர்க் (North York) பகுதியில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஜூன் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

டொரோண்டோ நகரில் உள்ள வடக்கு யார்க் (North York) பகுதியில் உள்ள ஒரு ஆதரவற்றோர் தங்குமிடத்தில் நேற்று பிற்பகல் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் தாக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக 70 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொரோண்டோ காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இந்த கத்திக்குத்துச் சம்பவம், வில்சன் அவென்யூ (Wilson Avenue) மற்றும் பெவர்லி ஹில்ஸ் ட்ரைவ் (Beverly Hills Drive) சந்திப்புப் பகுதியில் அமைந்துள்ள ஆதரவற்றோர் தங்குமிடத்தில் நடைபெற்றுள்ளது.

நேற்று நண்பகலுக்குப் பிறகு காவல்துறைக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இருவரும் 50 வயது மதிக்கத்தக்கவர்கள் என்று டொரோண்டோ காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரி, ரொட் ஜோக்கோ (Acting Insp. Todd Jocko) தெரிவித்துள்ளார்.

டொரோண்டோ அவசர மருத்துவப் பிரிவினர் (paramedics) காயமடைந்த இருவரையும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மற்றைய நபருக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி யாழில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை!
அடுத்த செய்தி நோவா ஸ்கோஷியாவில் காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

ஒன்ராறியோவில் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

ஜூன் 30, 2025
கனடாமுதன்மை செய்தி

Bill C-22 சட்டமூலம் தோற்கடிக்கப்படுமானால், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கப் பேரபாயம் ஏற்படும் என எச்சரிக்கை

மே 21, 2026
கனடா

கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

ஜனவரி 12, 2026
கனடாமுதன்மை செய்தி

CUSMA வர்த்தக ஒப்பந்தத்தை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள்காலக்கெடுவைத் தாண்டி நீடிக்கபடும்

ஏப்ரல் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?