கியூபெக் மாகாணத் தேர்தலில் Parti Québécois கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், கியூபெக்கின் அரசியல் எதிர்காலம் மற்றும் கனடாவின் தேசிய ஒற்றுமை தொடர்பான விவாதங்கள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
கியூபெக்கின் சுதந்திரம் தொடர்பான நிலைப்பாட்டைக் கொண்ட PQ கட்சி ஆட்சிக்கு வரவுள்ளதால், எதிர்காலத்தில் இந்த விவகாரம் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது குறித்து அரசியல் அவதானிகள் கவனம் செலுத்துகின்றனர்.
அதேவேளை, கனடாவின் பொருளாதார வளர்ச்சி, வீடமைப்புப் பிரச்சினை மற்றும் அமெரிக்க வர்த்தக வரிகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்குதல் போன்ற விடயங்களும் அரசியல் விவாதங்களில் முக்கிய இடம்பிடித்துள்ளன.
கியூபெக்கின் எதிர்காலம் தொடர்பான அரசாங்கத்தின் முடிவுகள், அங்கு வாழும் குடிமக்கள், தொழில் முனைவோர் மற்றும் புலம்பெயர்ந்த சமூகங்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்என்பதும் குறிப்பிடத்தக்கது .
