கனடாவின் மொன்றியல் நகரில் படகு டிரெய்லர் மற்றும் கட்டடச் சுவருக்கு இடையில் சிக்கிய 52 வயது நபர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொன்றியல் நகரின் சூட்-வெஸ்ட் (Sud-Ouest) பகுதியில் உள்ள டுமாஸ் வீதி மற்றும் அலார்ட் வீதி சந்திப்புக்கு அருகில் இன்று காலை இச்சம்பவம் நேரிட்டுள்ளது.
இன்று காலை 7:30 மணியளவில் அப்பகுதியில் மோட்டார் படகு ஒன்றை வாகனம் மூலம் இழுத்துச் சென்றுள்ள போதே குறித்த நபர், கட்டடச் சுவருக்கும் படகு டிரெய்லருக்கும் இடையில் சிக்கி படுகாயமடைந்துள்ளார்.
அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, பாதிக்கப்பட்ட நபர் மாரடைப்புக்குள்ளான நிலையில் காணப்பட்டார்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து மொன்றியல் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
