மொன்றியால் நகரில் இந்த வார இறுதியில் நடைபெறவுள்ள Marathon Beneva de Montréal ஓட்டப்போட்டியை முன்னிட்டு, நகரின் பல பகுதிகளில் வீதிகள் மூடப்படுவதுடன், வாகனப் போக்குவரத்திலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு நடைபெறும் 34ஆவது Marathon Beneva de Montréal போட்டியில், சுமார் 35,000 ஓட்டப்பந்தய வீரர்கள் 57க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வெள்ளிக்கிழமை, பொதுவான மரதன் போட்டி வீதித் தடைகள் அறிவிக்கப்படவில்லை. எனினும், சனிக்கிழமை காலை 6:45 மணி முதல் நண்பகல் 12:15 மணி வரை Maisonneuve Park பகுதியிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணி முதல் பிற்பகல் 3:25 மணி வரையிலும் பல பகுதிகளிலும் போக்குவரத்துத் தடைகள் ஏற்படும்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் முக்கிய மரதன் மற்றும் அரை மரதன் போட்டிகளுக்காக, Espace 67 பகுதியில் தொடங்கும் போட்டிப் பாதை Concorde Bridge, Notre-Dame Street, Lafontaine Park, Saint-Joseph Boulevard மற்றும் Saint-Laurent Boulevard உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் செல்லவுள்ளது.
இதனால் இந்தப் பகுதிகளில் வாகனத்தில் பயணிப்பவர்கள் மாற்றுப் பாதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கலாம். Route 136, Sherbrooke Street, Des Carrières Street, Van Horne Viaduct, Highway 40 மற்றும் Viau Bridge ஆகிய குறிப்பிட்ட இடங்களில் போட்டிப் பாதையைக் கடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், Montreal மற்றும் South Shore இடையிலான பயணங்களையும் பாதிக்கக்கூடிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி வரை Highway 25 தெற்கு நோக்கிய பாதை, Anjou interchange முதல் Longueuil பகுதியில் Route 132 வரையிலான பகுதியில் முழுமையாக மூடப்படும். Louis-Hippolyte-La Fontaine சுரங்கப்பாதையும் இந்த மூடலில் அடங்குகிறது.
இதற்கான மாற்றுப் பாதையாக Highway 40 மேற்கு, Highway 15 தெற்கு மற்றும் Samuel-De Champlain Bridge வழியாகப் பயணிக்குமாறு அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர்.
மரதன் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்பவர்கள் Metro மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

