Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அமெரிக்கா தடை

அக்டோபர் 9, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் வெள்ளிக்கிழமை(09.10.2026) தடைகளை விதித்துள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், இது சட்டத்தின் ஆட்சி மற்றும் சர்வதேச சட்ட அமைப்பின் அடிப்படைகள் மீதான தாக்குதல் என தெரிவித்துள்ளது.

மேலும், நீதிமன்றத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தனது 125 உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்கர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்துவதை அதிபர் ட்ரம்ப் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என்றும், அதனால் இந்த நீதிமன்றத்திற்கு தடைகள் விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நீதிமன்றத்துடனான பரிவர்த்தனைகள் தடைசெய்யப்பட்டு, அதன் வளங்கள் துண்டிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க கருவூலம் அறிவித்துள்ள இந்த தடைகளில், ஆறு மாத கால அவகாசம் மற்றும் தொலைத்தொடர்பு, மென்பொருள், ஓய்வூதியம் போன்ற சில விலக்குகளும் வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் கவலைகளுக்கு தீர்வுகாண நீதிமன்றத்திற்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ரூபியோ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சர்வதேச அளவிலான சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கிலேயே இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் தமது விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடரும் பணிகள் தொடரும் என்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் துணை தலைமை வழக்கறிஞர் நஷாத் ஷமீம் கான் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக பிடியாணை பிறப்பித்தமை மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் ஆகியவை தொடர்பாக அமெரிக்கா இந்த நீதிமன்றத்தை கண்டித்து வருகிறது.

அமெரிக்காவின் இந்த தடை அறிவிப்புக்கு முன்னதாக, 2003 முதல் 2008 வரை இந்த நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அமர்வில் பணியாற்றிய தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் நவி பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

சர்வதேச சட்ட நிறுவனங்கள் அரசியல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இந்த நேரத்தில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி மொன்றியலில் மரதன் போட்டி — வார இறுதியில் ஏற்படும் போக்குவரத்து மாற்றங்கள்!
அடுத்த செய்தி ரியாத் விமான நிலையத் தாக்குதலில் 3 பேர் பலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இங்கிலாந்தின் அரச நெறிமுறைகளை மீறியதாக இணையவாசிகள் கண்டனம்!

செப்டம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்உலகம்

ஆபிரிக்கக் கண்டம் பிளவடைந்து புதிய சமுத்திரம் உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஜனவரி 25, 2026
அண்மைய செய்திகள்உலகம்

திடீரென தீப்பிடித்து எரிந்த கார் – ரஷ்ய ஜனாதிபதியை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலா ?

மார்ச் 30, 2025
உலகம்

உணவுக்கு பதிலாக மண்ணை சாப்பிடுகிறோம் – காசா சிறுவன் உருக்கம்!

ஜூன் 20, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?