Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

ஆபிரிக்கக் கண்டம் பிளவடைந்து புதிய சமுத்திரம் உருவாகும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஜனவரி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஆபிரிக்கக் கண்டம் ஒரு பிரம்மாண்டமான பிளவின் மூலம் மெதுவாக இரண்டு துண்டுகளாகப் பிரிந்து வருவதாகவும், இதன் விளைவாக எதிர்காலத்தில் ஒரு புதிய சமுத்திரம் உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பூமியின் மேலோடு 15 முதல் 20 வரையான டெக்டோனிக் தகடுகள் எனப்படும் புவித் தகடுகளால் ஆனது.

ஆபிரிக்காவில் உள்ள கிழக்கு ஆபிரிக்க பிளவு (East African Rift – EAR) பகுதியில், ‘சோமாலிய தகடு’ மற்றும் ‘நுபிய தகடு’ ஆகிய இரண்டும் ஒன்றையொன்று விட்டு விலகிச் செல்கின்றன.

இந்த தகடுகள் ஆண்டுக்கு சில மில்லிமீற்றர்கள் என்ற அளவிலேயே நகர்கின்றன. எனவே, ஆபிரிக்கக் கண்டம் முழுமையாகப் பிரிந்து புதிய சமுத்திரம் உருவாக இன்னும் மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எத்தியோப்பியாவின் அபார் (Afar) பகுதியில் மூன்று தகடுகள் சந்திக்கும் இடம் தனித்துவமானதாகும்.

இங்கு நிலப்பரப்பு கடல் மட்டத்திற்குக் கீழே செல்வதால், காலப்போக்கில் கடல் நீர் உட்புகுந்து புதிய சமுத்திரம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பிளவு செயல்முறை சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது எனவும் இது செங்கடலில் இருந்து மொசாம்பிக் வரை சுமார் 2,174 மைல்கள் தூரம் நீண்டுள்ளது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலவியல் மாற்றம் மிகவும் மெதுவாக நடந்தாலும், கண்டத்தகடுகள் நகர்வதால் இந்தப் பகுதிகளில் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக வர்ஜீனியா டெக் (Virginia Tech) பல்கலைக்கழக புவியியலாளர் டி. சாரா ஸ்டாம்ப்ஸ் தெரிவித்துள்ளார்.

பூமியின் உட்பகுதியிலிருந்து எழும் வெப்பக் குழம்பு (Magma), நிலத்தின் மேலோட்டை வலுவிழக்கச் செய்து அதனை உடைப்பதாலேயே ஆபிரிக்காவின் புவியியல் வரைபடம் மெல்ல மெல்ல மாறி வருகிறதென ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

முந்தைய செய்தி மானிப்பாய் சபை அமர்வில் சலசலப்பு
அடுத்த செய்தி பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த முன்னாள் ஒலிம்பிக் வீரர் ரியான் வெடிங் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

ஈரானின் கடற்படை தலைவர் அலிரேசா டங்சிரி உயிரிழப்பு

மார்ச் 26, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். 29 பேர் கைது

அக்டோபர் 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தெஹிவளை – கல்கிஸ்ஸ நகரசபையின் சுகாதார நிர்வாகி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்!(VIDEO)

ஜூலை 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தலவாக்கலையில் குடியிருப்பு பகுதியில் தீ பரவல்!

அக்டோபர் 24, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?