தலவாக்கலை ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தில் உள்ள 9 ஆம் இலக்க லயன் தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு குடியிருப்பு பகுதியளவு சேதமடைந்துள்ளது.
இந்த குடியிருப்பில் உள்ள ஒரு அறையில் திடீரென பரவிய தீ காரணமாக,அனைத்து ஆடைகள் மற்றும் சில பொருட்கள் மீது தீ பரவியுள்ளது
தீ பரவியதை அடுத்து அயலவர்கள் மற்றும் தோட்ட மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தியதால், ஏனைய குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
சேதமடைந்த குடியிருப்பை புனரமைப்பதற்கு தோட்ட நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.
தீ விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
